மேலும் இரு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டது!

மேலும் இரு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டது!

காலி - வெலிகம சுகாதார அலுவலர் பிரிவில் இரண்டு கிராமங்களை தற்காலிகமாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கல்பொக்க மற்றும் அலுத்வீதிய போன்ற கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக மாகாண ஆளுநர் விலீ கமகே கூறினார்.

$ads={2}

மேலும், அந்த பகுதிகளில் இருந்து இதுவரை 18 கொரோனா தொற்றுகள் பதிவாகிய பின்னர் சுகாதாரத் துறையின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதுடன், PCR பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன.

அதேசமயம், களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள கூரே வீதியில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் பல கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post