கண்டியில் சுகாதார விதிமுறைகளை மீறி அடக்கம் செய்யப்பட்ட சடலம் - பொலிஸார் தீவிர விசாரணை!

கண்டியில் சுகாதார விதிமுறைகளை மீறி அடக்கம் செய்யப்பட்ட சடலம் - பொலிஸார் தீவிர விசாரணை!

கண்டி - மஹய்யாவ பிரதேசத்தில் நபர் ஒருவரின் சடலம் சுகாதார விதிமுறைகளை மீறி அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் நேற்று முன்தினம் உயிரிழந்த பெண்ணின் கணவர், கடந்த வாரம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலத்தை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி அடக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் கண்டி வைத்தியசாலையில் மரண பரிசோதகரின் அறிவிப்பிற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


$ads={2}

மஹய்யாவ தம்மதஸ்ஸ மாவத்தையில் வசிக்கும் நபர் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அவரது சடலம் கிராம சேவகரிடம் அறிவித்து விட்டு சாதாரண சடலம் போன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவி நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவரது கணவரது சடலம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி அடக்கம் செய்துள்ளதாக பெண்ணின் மரண பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தெரியவந்த பின்னர், மனைவிக்கு கொரோனா தொற்றியிருந்தால் கணவருக்கும் கொரோனா தொற்றியிருக்கலாம் என கண்டி தேசிய வைத்தியசாலையின் மரண பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய நபர் ஒருவர் உயிரிழந்தால் அது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகரிடம் அறிவிக்க வேண்டும்.

அறிவிப்புகளின்றி மேற்கொள்ளப்பட்ட அடக்கம் காரணமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 - JaffnaMuslim

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post