பாடசாலை இடைவேளை நேரத்தை குறைந்தது மேலும் 15 நிமிடங்களாவது அதிகரிக்க விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பரிந்துரைத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், மாணவர்களது கல்வி மற்றும் விளையாட்டு இரண்டையும் சமப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து கருத்து தெரிவித்தார்.
$ads={2}
மேலும் நாட்டில் அறிவார்ந்த விளையாட்டு வீரர்களின் பற்றாக்குறையை அவர் வலியுறுத்தினார்.
"பாடசாலை இடைவேளை நேரத்தை குறைந்தபட்சம் மேலதிகமாக இன்னும் 15 நிமிடங்களாவது நீட்டிப்பதற்கான சாத்தியத்தை நோக்குமாறு நான் கல்வி அமைச்சருக்கு பரிந்துரைத்தேன், இதனால் மாணவர்கள் இந்த கூடுதல் நேரத்தை மைதானத்தில் செலவிட முடியும்.
இது ஏனைய பாட நேரங்களில் இருந்து தலா 2 நிமிடங்கள் ஒதுக்குவதன் மூலம் சாத்தியமாகும்.” என அமைச்சர் மேலும் கூறினார்.
-எம்.எம் அஹமட்