வாகன இலக்கதகடில் அறிமுகமாகிய அதிரடி மாற்றம்!

வாகன இலக்கதகடில் அறிமுகமாகிய அதிரடி மாற்றம்!

வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது மாகாண குறியீட்டை நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

விநியோகத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


$ads={2}

வேறு மாகாணங்களில் உள்ள வாகனங்களின் உரிமையை மாற்றும்போது வாகன இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டியிருக்கும் என்பதனால் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது மாகாண குறியீட்டை நீக்க வேண்டுமென்ற போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே சமர்ப்பித்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒவ்வொரு வாகனமும் பதிவு செய்யப்படும்போது ஒரு தனிப்பட்ட எண் வழங்கப்படுவதால், துறைசார் தரவுத்தளத்தின் மூலம் வாகனங்களை எளிதில் அடையாளம் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய முறையின் கீழ், ஒவ்வொரு முறையும் ஒரு வாகனம் மாகாணங்களுக்கு இடையில் மாற்றப்படும் போது வாகன இலக்கத் தகடுகள் மாற்றப்பட வேண்டியதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post