பண்டிகைக் கால போலி நாணயத்தாள்கள்; பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பண்டிகைக் கால போலி நாணயத்தாள்கள்; பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்படுவது குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

ரூ. 20 மற்றும் ரூ.1000 போலி நோட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்களை பியகம பொலிஸார் நேற்று (23) கைது செய்த பின்னர் இது சம்பந்தமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் கடுவெல மற்றும் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்களாவர்.

$ads={2}

மேலும், போலி நாணயத்தாள்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அச்சிடும் இயந்திரமும் ஹோமாகம பகுதியில் வைத்து மீட்கப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போலி நாணயத்தாள்கள் குறித்து பரிவர்த்தனை செய்வதில் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post