கொரோனா தடுப்பூசி தொடர்பில் தேசிய ஆராய்ச்சி மன்ற தலைவரின் அதிரடி கருத்து!

கொரோனா தடுப்பூசி தொடர்பில் தேசிய ஆராய்ச்சி மன்ற தலைவரின் அதிரடி கருத்து!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, சோதனைக்குட்படுத்தப்படாத மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஹேமந்த தொடம்பஹால இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, தற்போது மூன்று வகையான மருந்துகள் சோதனை மட்டத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}

சோதனை மேற்கொள்ளப்படாத மருந்துகளை உட்கொள்ளக் கூடாது எனவும், சோதனை மேற்கொள்ளப்படும் மருந்துகள் தொடர்பில் தேசிய ஆராய்ச்சி மன்றத்தினால் அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவினால் ஆயுர்வேத மருந்தொன்று தயாரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஹேமந்த தொடம்பஹால இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தம்மிக பண்டாரவின் ஆயர்வேத மருந்து, சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், குறித்த மருந்தை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு வழங்கப்படும் உணவுக்கு மேலதிகமாக வழங்க, அண்மையில் ஆயுர்வேத திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்ததது.

எவ்வாறாயினும், குறித்த மருந்தை கொரோனா தடுப்பு மருந்ததாக அங்கீகரிக்கவில்லை என தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஹேமந்த தொடம்பஹால சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கேகாலை தம்மிக்க பண்டார என்ற நபரினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து, ஓரளவு சிறந்த பெறுபேற்றை வழங்கியுள்ளதாக, வத்துப்பிட்டிவலை ஆரம்ப வைத்தியசாலையின் பொது சுகாதாரப் பிரிவின் வைத்தியர் தம்மிக குமார தெரிவித்திருந்தார்.

தமது வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் 143 கொரோனா தொற்றாளர்களின் அனுமதிக்கு இணங்க, குறித்த மருந்து வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் அடிப்படையில், 10 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக , வைத்தியர் தம்மிக குமார சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post