சாட்சியம் அளிக்க வட்டிலப்பம் பொதிகலுடன் சென்ற ரிஸ்வி முப்தி; ஆணைக்குலுவில் ஏற்பட்ட பரபரப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாட்சியம் அளிக்க வட்டிலப்பம் பொதிகலுடன் சென்ற ரிஸ்வி முப்தி; ஆணைக்குலுவில் ஏற்பட்ட பரபரப்பு!

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க நேற்று (10) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் அவரது குழுவினர், ஆணைக்குழுவுக்கு பல பரிசுப் பொதிகளை எடுத்து வந்ததை அவதானிக்க முடிந்தது.

சுமார் 20 பொதிகள் இவ்வாறு எடுத்து வரப்பட்டதுடன் அதில் 12 பொதிகள் ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை இடம்பெறும் மண்டபத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டன. ஏனையவை, ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுவதை அவதானிக்க முடிந்தது.

$ads={2}

அந்த பொதிகளில் பலவற்றை ஆணைக் குழுவின் சேவையாளர்கள் சிலரும் இணைந்து ஆணைக்குழுவுக்குள் பொதிகளை எடுத்து சென்றதை அவதானிக்க முடிந்தது. எவ்வாறாயினும் அந்த பொதிகளில் ‘வட்டிலப்பம்' இருந்ததாக பின்னர் அறிய முடிந்தது.

அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி
நீதிமன்றத்துக்கு சமமான கெளரவத்துடன் இடம்பெறும் சாட்சி விசாரணை இடம்பெறும் இடத்துக்குள் சாட்சியாளர் ஒருவர் இவ்வாறு வட்டிலப்பம் எடுத்து சென்றமை பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

வழமையாக ஆணைக்குழுவுக்குள் செல்லும் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் அண்மைக் காலமாக கொரொனா நிலைமை காரணமாக சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் குறித்த வட்டிலப்பம் பொதிகளை எடுத்து செல்லும்போது ஆணைக்குழுவின் சேவையாளர்களும் தொடர்புபட்டிருந்ததால் சோதனைகள் இன்றி அவை உள்ளே எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

குறித்த பொதிகளை சோதனைச் செய்ததாகவும், அதில் வட்டிலப்பம் இருந்தமை உறுதியான நிலையில், ஏனைய நாட்களிலும் ஆணைக்குழுவின் சேவையில் உள்ளவர்கள் உணவுகளை உள்ளே எடுத்துச் செல்வதால், இதன்போதும் சேவையாளர்களும் சேர்ந்து எடுத்துச் சென்றதாலும் அதனை தடுக்கவில்லை என பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

$ads={2}

எவ்வாறாயினும் பின்னர், அந்த பொதிகள் திருப்பி அனுப்பட்டதாக ஆணைக்குழுவின் ஊழியர் ஒருவர் தெரிவித்தபோதும் அவை திருப்பி எடுத்துச் செல்வதை நாம் காணவில்லை.

இந்த விடயம் தொடர்பில் நேற்று மாலை வரை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு எந்த உத்தியோகபூர்வ அறிவித்தல்களையும் வெளியிடவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

-எம்.எப்.எம்.பஸீர்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.