எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளுமின்றி பி.சி.ஆர் இற்கு ஒத்துழைப்பு வழங்கிய திஹாரிய மக்கள்!

எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளுமின்றி பி.சி.ஆர் இற்கு ஒத்துழைப்பு வழங்கிய திஹாரிய மக்கள்!

திஹாரிய பகுதி மக்கள் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளாது நேற்றைய தினம் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

கம்பாஹா பிராந்திய சுகாதார சேவைகளின் மாவட்ட பணிப்பாளர் டாக்டர் மிகாரா எப்பா, சோதனைகளை முன்னெடுத்தபோது திஹாரிய குடியிருப்பாளர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு அமைதியான முறையில் ஒத்துழைப்பு நல்கியதாக சுட்டிக்காட்டினார்.


$ads={2}

பி.சி.ஆர் சோதனைகளை நடத்தும் சுகாதார அதிகாரிகளுக்கு உதவ அநேகர பொலிஸ் அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.

அது மாத்திரமன்றி பி.சி.ஆர். சோதனையின் போது அமைதியான சூழ்நிலையினை உருவாக்குவதற்காகவும், சோதனையின் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்தவும் 14 மெளலவிகள் உதவி புரிந்ததாகவும் டாக்டர் மிகாரா எப்பா மேலும் கூறினார்.

இதேவேளை நேற்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் 45 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post