உடல்களை குளிரூட்டியில் வைக்கும் விவகாரம்; எனது கோரிக்கை உயிருடன் உள்ள நபர்களை பாதுகாப்பதே தவிர இறந்தவர்களை குறித்து கிடையாது! எம்.பி பிரேமநாத் சி. தொலவத்த

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உடல்களை குளிரூட்டியில் வைக்கும் விவகாரம்; எனது கோரிக்கை உயிருடன் உள்ள நபர்களை பாதுகாப்பதே தவிர இறந்தவர்களை குறித்து கிடையாது! எம்.பி பிரேமநாத் சி. தொலவத்த

sri lanka forced cremation of muslim bodies

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை குளிரூட்டியில் வைப்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேற்று (27) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் இறுதியைக் கிரியைகள் குறித்து தீர்க்கமான முடிவொன்று எட்டப்படும் வரை, உடல்களை குளிரூட்டியில் வைக்குமாறு சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.


$ads={2}


எனினும், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என சுகாதாரத் தரப்பு தெரிவித்துள்ள நிலையில் எவ்வாறு அவற்றை குளிரூட்டியில் வைக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்நிலையில், குறித்த நடவடிக்கையின் ஊடாக சுகாதாரத் தரப்பின் உத்தரவு மீறப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதற்கமைய, உடல்களை குளிரூட்டியில் வைக்கும் விவகாரத்தில் தலையீடுகள்காணப்படுகிறதா என்பது குறித்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


எனினும், தன்னுடைய கோரிக்கையின் ஊடாக ஒரு இனத்தையோ அல்லதுமதத்தினையோ தாக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தன்னுடைய கோரிக்கையானது உயிருடன் உள்ள நபர்களை பாதுகாப்பதே தவிர உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் குறித்து கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில், இறுதிக் கிரியைகள் குறித்து விசேட நிபுணர்களின் இறுதித் தீர்மானம் வெளியாகும் வரை உடல்களை குளிரூட்டியில் வைக்காது அவற்றை தகனம் செய்யுமாறு  நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.