கேகாலை தம்மிக கொரோனா எதிர்ப்பு பானத்தை பருகியவருக்கு கொரோனா தொற்று!

கேகாலை தம்மிக கொரோனா எதிர்ப்பு பானத்தை பருகியவருக்கு கொரோனா தொற்று!

வரகாபொலை பிரதேச பிரிவில் 12 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதோடு, உடுகும்புர, ஒத்னாம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபர், கேகாலை தம்மிக  கொரோனா எதிர்ப்பு பானத்தினை அருந்தியவர் என வரகாபொலை பொது சுகாதார ஆய்வாளர் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்

இதேவேளை குறித்த பானத்தை வாங்குவதற்காக கேகாலையில் உள்ள மருத்துவரின் வீட்டிற்கு முன்னால் நாளாந்தம் பெருமளவு மக்கள் ஒன்று கூடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


$ads={2}

வரகாபொலை பொது சுகாதார ஆய்வாளர் ஹேமந்த குமார மேலும் தெரிவிக்கையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

(திவயின பத்திரிகை)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post