கத்தார் தேசிய கிண்ண கிரிக்கட் போட்டித்தொடரில் இலங்கை அணி வீரர்கள் விபரம் வெளியானது!

கத்தார் தேசிய கிண்ண கிரிக்கட் போட்டித்தொடரில் இலங்கை அணி வீரர்கள் விபரம் வெளியானது!

டிசம்பர் 18 ஆம் திகதி கத்தார் தேசிய தினத்தை கொண்டாடும் விதமாக, கத்தார் ஒலிம்பிக் கமிட்டி மற்றும் கத்தார் கிரிக்கெட் அசோசியேஷன் ஆகியவை டிசம்பர் 25 ஆம் திகதி கட்டாரில் கிரிக்கெட் நேசிக்கும் ஆசிய சமூகத்திற்காக ஒரு தேசிய போட்டியை நடத்த ஏற்பாடு செய்துள்ளன.  

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நான்கு அணிகளும் போட்டிகளில் பங்கேற்கின்றன.  இந்த நான்கு நாடுகளின் மக்கள்தொகை கட்டாரில் மொத்த மக்கள் தொகையில் 2.5 மில்லியனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானதாகும், கட்டாரில் இலங்கை மக்கள் தொகை கிட்டத்தட்ட 150,000 ஆகும்.


$ads={2}

 கட்டாரில் உள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் இலங்கையைச் சேர்ந்த பல முன்னாள் பாடசாலை மற்றும் கழக கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர், அவர்கள் இப்போது கட்டாரில் வசித்து வருகின்றனர்.  கத்தாரில் உள்ள 30 இலங்கை கிரிக்கெட் வீரர்களில் 18 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டது.  ஒரு அணியாக அவர்கள் போட்டிகளுக்கு சுமார் ஒரு மாத காலமாக பயிற்சி செய்து வருகின்றனர்.


கத்தாரில் நடைபெற்ற தேசிய கின்ணத்திற்கான இலங்கை அணியில் ரிஸ்லான் இக்பார் (அணித்தலைவர்), கயான் புத்திக, ஆண்ட்ரி பெரெஞ்சர், கலித் அமரசிங்க, இமல் லியனகே, சந்தூன் சாமர விதானகே, யசிந்து பிரபாஷ்வர, ஜீவக சமரகூன், ரஜீவ நிர்மால், ஸ்யான் இஸ்மத், இம்ரான் யாசீன், முகமது நயீம், அசாத் போர்ஹாம், இம்ராஸ் ராஃபி, முகமது முன்ஷிஃப், மோஷின் கான் முர்ஷித், ரோமெலோ குமாரேகே, தலைமை பயிற்சியாளர் - சமன் பொன்சேகா, உதவி பயிற்சியாளர் - லஹிரு சதுரங்கா, அணி மேலாளர் - தாரிக் மன்சூர்.


இந்த போட்டித்தொடர் டி10 போட்டியாக அமையவிருக்கின்றது, இப்போட்டித் தொடரானது ஆசிய சமூகத்தினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும் நோக்கத்தினை கொண்டது, ஏனெனில் இது ஆசிய கிண்ணமாக கருதப்படுவதினால், அவர்களுக்கும் பெறும் மிக நெருக்கத்தினை ஏற்படுத்துகின்றது.


இத்தேசிய கிண்ணத்தை இலங்கை அணி கடந்த 2016 ஆம் ஆண்டில் சுவீகரித்தமையும் குறிப்பிடத்தக்கது. 


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post