பல்கலைக்கழகங்களுக்கான மாணவர்கள் பதிவுக் காலம் மேலும் நீடிப்பு!

பல்கலைக்கழகங்களுக்கான மாணவர்கள் பதிவுக் காலம் மேலும் நீடிப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேலும் ஒரு வாரத்திற்கு பல்கலைக்கழகங்களுக்கான பதிவுக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

$ads={2}

இந்த வருடத்திற்கான கல்வி பொதுத் தாராதர உயர்தர பரீட்சை தொடர்பில் சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் காணப்படுகின்றமையும் இவ்வாறு காலநீடிப்பு வழங்குவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post