கொரோனாவை இலங்கையில் கட்டுப்படுத்த பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் அரசிடம் முன்வைத்துள்ள யோசனை!

கொரோனாவை இலங்கையில் கட்டுப்படுத்த பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் அரசிடம் முன்வைத்துள்ள யோசனை!


எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை மேல் மாகாணத்தைத் தனிமைப்படுத்தவும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களைக் கட்டுப்படுத்தவும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கிறது.


பொதுச் சுகாதார அதிகாரிகள் சம்மேளனம் இந்த யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கிறது.


கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையை அடுத்தே இந்த யோசனை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.


$ads={2}


தற்போதைய நிலையில் கொரோனா வைரசின் தாக்கம் மேல் மாகாணத்திலிருந்து ஏனைய இடங்களுக்கும் பரவுவதற்கான ஏதுக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


நத்தார் மற்றும் புதுவருட காலத்தை ஒட்டி மக்கள் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குச் செல்லும்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


எனவே எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை மேல் மாகாணத்தைத் தனிமைப்படுத்தவும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுச் சுகாதார அதிகாரிகள் சம்மேளன செயலாளர் கோரிக்கையை விடுத்துள்ளார் .


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post