காலினால் எனது முதுகில் தாக்கி எனது நெஞ்சில் அடித்து எனது கையையும் உடைத்து கீழே தள்ளப்பட்டேன்! பிள்ளையானின் கும்பலால் தாக்கப்பட்ட பெண்கள் தெரிவித்த விடயம்!

காலினால் எனது முதுகில் தாக்கி எனது நெஞ்சில் அடித்து எனது கையையும் உடைத்து கீழே தள்ளப்பட்டேன்! பிள்ளையானின் கும்பலால் தாக்கப்பட்ட பெண்கள் தெரிவித்த விடயம்!


வாழைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தின் போது தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இரண்டு பெண் பிரதேச சபை உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இரண்டு சபை உறுப்பினர் விளக்கமறியிலில் உள்ள நிலையில் எதிர்தரப்பினர் சபையை நடாத்தக் கூடாது என சபை மண்டப நுழைவாயிலை மூடி போராட்டம் நடாத்தினார்கள்.


இதன் நிமிர்த்தம் பல்வேறு குழப்ப நிலைகளுக்கு மத்தியில் ஆளும் கட்சி உறப்பினர்கள் சபை மண்டபத்திற்கு தவிசாளரை கொண்டு செல்லும் போது எதிர்தரப்பு உறுப்பினர்கள் தடுக்க முற்பட்ட வேளையில் இரண்டு உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாக தாக்குதலுக்கு இலக்கான பெண் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


இதில் தாக்கப்பட்ட வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எல். நபீரா கருத்து தெரிவிக்கையில்,


$ads={2}


"இரண்டாவது வரவு செலவுத் திட்டத்தினை தவிசாளரே கட்டியனைத்து விட்டு அதனை ஒத்தி வைத்தார். பின்னர் இரண்டு உறுப்பினர்களை சிறைக்கு அனுப்பி விட்டு சபையை நடாத்த திட்டமிடப்பட்டது.


எங்களது இரண்டு உறுப்பினர்களை வருகை தராமையினால் சபையை நடாத்த கூடாது என்று நான்கு பெண் உறுப்பினர்களும் போராட்டம் நடாத்திய போது சபை உறுப்பினர் மணி காலினால் எனது முதுகில் தாக்கி எனது நெஞ்சில் அடித்து எனது கையையும் உடைத்து கீழே தள்ளினார்.


அத்தோடு சபை உறுப்பினர்களான கபூர், சுதர்சன் இருவரும் எனது கழுத்தினை பிடித்து இறுக்கினார். அத்தோடு எனது ஆடையை பிடித்து இழுத்தனர். அத்தோடு சபைக்கு சம்பந்தமில்லாத ஒப்பந்தகாரர் பஸ்மி என்பவர் எனக்கு தகாத வார்த்தையில் பேசினார்.

நான் தாக்கப்பட்ட நிலையில் எனது சக உறுப்பினர்கள் என்னை தூக்கி வைத்தியசாலையில் அனுமதித்தனர்."


இதில் தாக்கப்பட்ட வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி.ப.லெட்சுமி கருத்து தெரிவிக்கையில்,


"எமது இரண்டு சபை உறுப்பினர்களை வருகை தந்ததும் கூட்டத்தினை நடாத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் காலில் விழுந்து அழுது கேட்டேன். ஆனால் அவரோடு வந்த அடியாட்கள் என்னை கொலை செய்வதாக மிரட்டினார். பிள்ளையானின் ஆதரவாளர் சுமன் என்பவர் என்னை வெட்டுவதாக தெரிவித்தார்.


என்னை தாக்குமாறு தவிசாளர் சபை உறுப்பினர்களான் இம்தியாஸ் மற்றும் நடராசாவிடம் தெரிவித்ததை தொடர்ந்து இவர்கள் என்னை காரசாரமதாக தாக்கினார்கள். எனது மாலையால் எனது கழுத்தினை நசித்தார்கள்" என்றார்.


$ads={2}


வாழைச்சேனை சபை உறுப்பினர்கள் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் முறைப்பாடுகளை பெற்றுக் கொண்டுள்ளதுடன், தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post