நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரொனா?

நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரொனா?

நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கொரொனா தொற்றுக்கு சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சபாநாயகரின் பாதுகாப்புப்படையில் இருந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் சபாநாயகரின் அலுவலகத்தில் உள்ள பலரிடமும் நெருக்கமாக இருந்துள்ளார்.

$ads={2}

இதனையடுத்து குறித்த அந்த அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் பலரும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

மேலும், சபாநாயகர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவர்களுக்கு இன்று (27) PCR  பரிசோதனை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post