மேலுமொரு கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம்! பொது மக்களிடம் உதவியை நாடும் பொலிஸார்

மேலுமொரு கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம்! பொது மக்களிடம் உதவியை நாடும் பொலிஸார்

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட சப்புகஸ்கந்த - மாகொல வடக்கு தேவாலய வீதி பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வீடு திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

அவருக்கு மேற்கொண்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்றியமை உறுதியாகியது.

$ads={2}

அவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல வீட்டிற்கு சென்ற போது அவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற இளைஞனை கைது செய்வதற்கு பொது மக்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

தப்பி சென்ற இளைஞன் 22 வயதுடையவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது பெயர் நிமேஷ் மதுஷங்க என அவர் கூறியுள்ளார்.

இந்த இளைஞர் தொடர்பில் தகவல் அறிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Updated @ 12:15pm

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post