கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லை! -வைத்தியர் அசேல குணவர்தன

கொரோனா தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லை! -வைத்தியர் அசேல குணவர்தன


கொரோனா தொற்று ஏற்பட்டு மரணிப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (29) பகல் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பேசியபோது அவர் இத்தகவலை உறுதிபடத் தெரிவித்தார்.


$ads={2}


கொரோனா தொற்றால் மரணிக்கும் உடல்களை புதைப்பதற்கான எந்த தீர்மானத்தையும் இதுவரை சுகாதார அமைச்சு எடுக்கவில்லை. அவ்வாறான உடல்களை எரிப்பதாக கடந்த மார்ச் மாதமே தீர்மானிக்கப்பட்டது. இதற்கிணங்க அமைக்கப்பட்டுள்ள விசேட மருத்துவர்கள் அடங்கிய குழு தற்சமயம் கலந்துரையாடி வருகிறது. ஏதேனும் மாற்றுத் திட்டங்கள் இருந்தால் பொதுமக்களுக்கு அறிவிப்போம். அதுவரை உடல்கள் எரிக்கப்படுவதே அரசாங்கத்தின் செல்லுபடியான தீர்மானமாகும் என்று அவர் கூறினார்.


இதற்கிடையில், கொரோனா வைரஸால் இறக்கும் மக்களின் சடலங்கள் குறித்து ஒரு முடிவை சுகாதாரத் துறையினரும், அனைத்து மதம் சார்ந்தவர்களும் அரசியல் தலையீடு இல்லாமல் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post