புலமைப் பரிசில் பரீட்சை - புதிய பாடசாலைகளுக்கான விண்ணப்பம் தொடர்பில்!

புலமைப் பரிசில் பரீட்சை - புதிய பாடசாலைகளுக்கான விண்ணப்பம் தொடர்பில்!

இந்த வருடம் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில், மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை, 2021 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்புக்குச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய விண்ணப்பங்களை, எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்குமாறு அறிக்கை ஒன்றை விடுத்து கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கான விண்ணப்பங்களையும் ஆலோசனைப் பத்திரங்களையும், பாடசாலைகளின் அதிபர்களிடமிருந்து பெற்றோர்களுக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

$ads={2}

சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை, எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர், மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய பாடசாலைகளின் அதிபரிம் கையளிக்க வேண்டும் என கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கொவிட் பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, நாட்டில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களைத் தத்தமது பாடசாலைகளுக்கே பெற்றுக்கொள்ள, சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றி வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களை நாடுமாறும் கல்வியமைச்சு பெற்றோர்களைக் கேட்டுள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post