
அக்குறணைப் பிரதேசத்தில் இன்று (29) மேலும் 10 தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், இப்பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 290ஆக உயர்வடைந்துள்ளது.
$ads={2}
எனவே, அக்குறணை பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளதால் அனைவரும் தம்மை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
$ads={1}
எதிர்வரும் 14 நாட்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியேராமல், வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள், ஏதேனும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டி வந்தால் கிராமங்களில் நியமிக்கப்பட்டுள்ள தொண்டர்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.