மாகாணக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து அரச மருத்துவ சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

மாகாணக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து அரச மருத்துவ சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

Haritha aluthge yazhnews
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து வரையறுக்கப்பட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்றைய தினம் (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமாயின் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து வரையறுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


அவ்வாறு செய்யத் தவறினால் அதன் பிரதிபலன்களை நாம் ஜனவரி மாத நடுப்பகுதியில் அனுபவிக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பாடசாலைகளை திறப்பதற்கும், சுற்றுலாத்துறைக்காக நாட்டை திறந்து விடுவதற்கும் ஜனவரி மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்தக் கட்டுப்பாடு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பொதுமக்கள் இந்த தருணத்தில் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் உச்ச அளவில் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு வழங்கத் தவறினால், அதிகாரிகள் முடக்க நிலையை அறிவிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post