முஸ்லிம்களது ஜனாஸா தகனம் செய்வதினை ஜனாதிபதி ஊடாக ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்! மகாநாயக்க தேரரிடம் வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்களது ஜனாஸா தகனம் செய்வதினை ஜனாதிபதி ஊடாக ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்! மகாநாயக்க தேரரிடம் வேண்டுகோள்!

இலங்கையின் மகாபுர நிக்காயவின் அகில இலங்கையின் பதவி வகிக்கும் கொட்டுக்கொட தம்மவாசய மகா நாயக்கவை முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நேற்று (24) கல்கிசையில் உள்ள விகாரையில் வைத்து சந்தித்தார்.


இச்சந்திப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வஜிர ஜயகொடவும் கலந்து கொண்டார். இச்சந்திப்பில் மகாநாயக்க தேரரிடம்  முஸ்லிம்களது ஜனாஸா இலங்கையில் எரிப்பதனை மகாநாயக்கர்கள் இணைந்து நிறுத்தி அதனை ஜனாதிபதி ஊடாக ஒரு முடிவுக்கு கொண்டுவருமாறும் முஸ்லிம்கள் மரணிக்கும் ஜனாஸாக்களை புதைப்பதற்கு மகாநயாக்கள் கூடி ஒரு தீர்மாணத்தினை எடுக்கும்படியும் கூறினார்.


$ads={2}


உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிருத்தலின்படி 130 நாடுகளும் கொரோனா மரணிக்கும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை உரிய சுகாதார பேனுதலின் படி அடக்கம் செய்வதாகவும் இலங்கையில் மட்டும் அதனைக் கடைப்பிடிக்காது பலவந்தமாக எரிப்பதாகவும் இதனால் இந்த நாட்டில் வாழும் மக்கள் மட்டுமல்ல ஏனைய நாடுகளும் வித்தியாசமான கோணத்தில் இலங்கையை உற்று நோக்குகின்றது. இந்த நாட்டில் உள்ள 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மத்திய கிழக்கு நாடுகள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.


நாம் இலங்கை ஒரு ஜக்கியமாக சகல சமூகங்களது மதம் கலாச்சாரங்களை மதித்து நடத்தல் வேண்டும். இதனை மகாநாயக்கர்கள் இணைந்தே இதனை இந்த நாட்டின் ஆட்சியில் உள்ள அரச மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என இம்தியாஸ் வேண்டிக் கொண்டார்.


இவ்விடயம் சம்பந்தமாக நிக்காய கொட்டுக்கொட தம்மவாசஸ மகாநாயக்க தேரர் தெரிவிக்கையில் எமது நிக்காயவின் அடுத்த கூட்டத்திலும் ஜனாதிபதி சந்திப்பிலும் இவ் விடயம் சம்பந்தமாக கலந்து ஆலோசிப்பதாக தெரவித்தார். அவர் தற்போதைய நிலையில் சுகவீனமற்று இருப்பதாகவும் அவரது செயலாளர் தெரிவித்திருந்தார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.