பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த இருவருக்கு புதிய வகை கொரோனா எனும் செய்தி முற்றிலும் போலியானது! -சுகாதார அதிகாரி

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த இருவருக்கு புதிய வகை கொரோனா எனும் செய்தி முற்றிலும் போலியானது! -சுகாதார அதிகாரி


பிரித்தானியாவில் வேகமாக பரவும் புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ் இலங்கைக்குள் இதுவரை நுழையவில்லை என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சக அதிகாரியொருவர் பிரிட்டனில் இருந்து வரும் இலங்கையர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.


பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த இருவர் புதிய வகை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வெளியான செய்திகள் போலியானது என சுகாதார அமைச்சை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


பிரிட்டனில் இருந்து இலங்கை வருபவர்கள் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.


அவர்கள் பின்னர் தங்கள் வீடுகளில் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.


பிரித்தானியாவிலிருந்து வருபவர்கள் சமூகத்துடன் உடனடியாக தொடர்பு கொள்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post