சுனாமி மகன் விவகாரம்; ஒரு தரப்பினருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

சுனாமி மகன் விவகாரம்; ஒரு தரப்பினருக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  மரபணு பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், சுனாமியில் காணாமல் போன ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்து அந்த இளைஞருக்கு இரு தாய்மார்கள் உரிமை கோருவது தொடர்பான வழக்கு இன்று (08) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இதன்போது மகனுக்காக ஏங்கும் இரு தாய்மார்களும் நீதிமன்றத்துக்கு வருகை தந்ததுடன் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனையை இன்று (08) மேற்கொள்வதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.   


$ads={2}


இருப்பினும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கோரோனா அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு மரபணு பரிசோதனை தொடர்பில் பின்னர் அறிவிப்பதாக தெரிவித்த சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.


இன்றைய வழக்கு விசாரணைக்காக கடந்த தவணையில் நீதிமன்றுக்கு வருகை தராத ஒரு தரப்பினர் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post