இந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களை ஒடுக்குவதற்கு முயற்சிக்கின்றது என முன்னாள் அமைச்சர் அலிசாஹிர் மௌலானா குற்றம் சுமqத்தியுள்ளார்.$ads={2}
தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நல்ல ஜனாதிபதிகள் தேசத்தை ஐக்கியப்படுத்துவார்கள் என்ற போதிலும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதற்கு எதிர்மறையாக செயற்படுகின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொரொனா தொற்றினால் உயிரிழப்போரை கட்டாயமாக தகம் செய்ய வேண்டியதில்லை என்பதற்கு பெரும் எண்ணிக்கையிலான ஆதாரங்கள் காணப்படும் நிலையில், அரசாங்க செலவில் சடலங்கள் தகனம் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை சமூகத்தை ஒடுக்கும் நோக்கில் இந்த அரசாங்கம் இருண்ட ஆழங்களை தொடுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.