கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறை; 1 லட்சம் அபராதம்!

கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறை; 1 லட்சம் அபராதம்!

இந்திய, மத்திய பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதாவை மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாரத ஜனதா ஆட்சி நடக்கிறது. பெண்களை திருமணம் செய்து வலுக்கட்டாயமாக மதம் மாற்றும் 'லவ் ஜிகாத்' முறைக்கு எதிராக சமீப காலமாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

இதையடுத்து, உத்திர பிரதேசத்தில் சமீபத்தில் அதற்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

மத்திய பிரதேசத்திலும் கட்டாய மதமாற்றம் செய்வோரை தண்டிக்கும் வகையில் 'மத சுதந்திர சட்டம்' என்ற சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. 

$ads={2}

இந்த மசோதா, இம்மாதம் துவங்கவுள்ள சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்படவுள்ளது. 

இந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:

மத சுதந்திர சட்ட மசோதாவின்படி, மதமாற்றத்திற்காக மட்டும் செய்யப்படும் இது போன்ற திருமணங்கள், சட்டப்படி செல்லாது என அறிவிக்கப்படும். இந்த சட்டத்தை மீறி வலுக்கட்டாயமாக மதம் மாற்றுவோருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

குறிப்பாக 'மைனர்' சிறுமி அல்லது எஸ்.சி அல்லது எஸ்.டி பிரிவைச் சேர்ந்த பெண்ணை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வோருக்கு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். 

ஒரே நேரத்தில், பலரை மதமாற்ற முயற்சிக்கும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

-இந்திய ஊடகம்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post