சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பஸ்களின் போக்குவரத்து அனுமதி ரத்து!

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பஸ்களின் போக்குவரத்து அனுமதி ரத்து!

அரசாங்கம் பிறப்பித்த கொரோனா வைரஸ் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 30 பேருந்துகளின் அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது.
$ads={2}
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவ்வாறு பேருந்து வண்டிகளின் போக்குவரத்து அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கத் தவறும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post