காலி மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு பூட்டு!

காலி மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு பூட்டு!


காலி கல்வி வலயத்திற்குட்பட்ட 26 பாடசாலைகள் நாளை முதல் மூடப்படவுள்ளன.


தென்மாகாண கல்வி அமைச்சினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு  காலி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை காலி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 21 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post