கண்டி மாவட்டத்தின் பல இடங்களில் தொடர் நிலநடுக்கம்; ஆராய நிபுணர் குழு நியமனம்!

கண்டி மாவட்டத்தின் பல இடங்களில் தொடர் நிலநடுக்கம்; ஆராய நிபுணர் குழு நியமனம்!

கண்டி மாவட்டத்தில் அடுத்தடுத்து இடம்பெற்ற நிலநடுக்கம் பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இந்த நிபுணர் குழு இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கமைய 11 பேர் கொண்ட இந்தக் குழுவுக்கு புவிச்சரிதவியல் மற்றும் கட்டிடச் சுரங்கத் திணைக்களத்தின் தலைவர் அநுர வல்பொல தலைமை வகிக்கின்றார்.

$ads={2}

கடந்த 7 தடவையாக கண்டி – திகன, அம்பாக்கோட்டை, அளுத்வத்த, ஹாரகம உட்பட பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி இந்த குழு ஆய்வுகளை நடத்தவுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு, எதிர்வரும் நாட்களில் அவற்றைக் கொண்டு எடுக்கவுள்ள நடவடிக்கை என்பவற்றை இந்த நிபுணர் குழுவே அறிவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post