
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளிலேயே இவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியின் பிரதான நிறைவேற்றதிகாரி மேஜர் ஜெனரல் டப்ளியூ.டி.எல்.சி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயர்நீதிமன்ற கட்டட தீப்பரவலில் அங்குள்ள ஆவணங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வௌியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குளிரூட்டிக் கட்டமைப்பில் ஏற்பட்ட தீயினாலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன் இந்த தீ விபத்து தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் ஆகியன தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியின் பிரதான நிறைவேற்றதிகாரி மேஜர் ஜெனரல் டப்ளியூ.டி.எல்.சி விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.