கொழும்பின் கொரோனா பரவல் தொடர்பில் இராணுவ தளபதியின் விசேட அறிக்கை!

கொழும்பின் கொரோனா பரவல் தொடர்பில் இராணுவ தளபதியின் விசேட அறிக்கை!

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 22 ஆம் திகதிக்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதாகவும், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


$ads={2}

இதேவேளை டிசம்பர் மாதம் இறுதி பகுதிவரை நாட்டில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வாரங்கள் பண்டிகைக் காலம் என்பதனால் பொதுமக்கள் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post