பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்துக்கு நிகழ்ந்துள்ள சோகம்!

பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்துக்கு நிகழ்ந்துள்ள சோகம்!


தமிழகத்தின் பிரபல செய்தி வாசிப்பாளரும், பிக்பாஸ் பிரபல்யமுமான அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி. சம்பத் இன்று காலமானார்.


ஆர்.சி. சம்பத் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


$ads={2}


தாய் எனும் வார இதழ் மூலம் தனது ஊடக பயணத்தை இவர் ஆரம்பித்துள்ளார்.


மேலும் அவர் உயிரிழக்கும் தருவாய் வரை, பல நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஆர்.சி.சம்பத், உயிரிழக்கும் இறுதித் தருணத்தில் பிரபல வார இதழ் ஒன்றில் கடமையாற்றியுள்ளார்.


இவ்வாறான நிலையிலேயே, அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post