நாட்டின் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பான முழு தொகுப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பான முழு தொகுப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவர் இரத்தம் விஷமானமை மற்றும் கொரோனா நிமோனியா தாக்கம் ஆகியவற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

வீரகுல பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட இருதய நோயினால் உயிரிழந்துள்ளார்.


$ads={2}

கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 77வயதான ஆண் ஒருவர், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொரோனா நிமோனியா தாக்கம் ஆகியவற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 76வயதான ஆண் ஒருவர், கொரோனா நிமோனியா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கிரிவத்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 88வயதான பெண் ஒருவர், உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட இருதய நோய் ஆகியவற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 83வயதான பெண் ஒருவர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட இருதய நோய் ஆகியவற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 171 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 618 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களே இவ்வாறு நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 998 ஆக காணப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை அண்மித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 491 பேர் நேற்று குணமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 944 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் 517 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்காக இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்து 86 ஆயிரத்து 62 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இதுருவ − துன்துவ கிழக்கு மற்றும் துன்துவ மேற்கு பகுதிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

குறித்த பகுதிகளில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.