லங்கா பிரீமியர் லீக் தொடரில் இருந்து கண்டி டஸ்க்கர்ஸ் அணி வெளியேற்றம்!

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இருந்து கண்டி டஸ்க்கர்ஸ் அணி வெளியேற்றம்!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் T20 தொடரில் இருந்து கண்டி டஸ்க்கர்ஸ் அணி வெளியேற்றப்பட்டுள்ளது.

கோல் கிலேடியேடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததன் காரணமாக கண்டி டஸ்க்கர்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்நிலையில், கண்டி டஸ்க்கர்ஸ் அணியை 09 விக்கெட்டுகளால் வென்ற கோல் கிலேடியேடர்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதன்படி, கோல் கிலேடியேடர்ஸ், ஜப்னா ஸ்டாலியன், கொலோம்போ கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைக்கின் ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

$ads={2}

இதற்கமைய முதலாவது அரையிறுதிப் போட்டியில் தம்புள்ள வைக்கின் மற்றும் கொலோம்போ கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

அத்துடன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன் மற்றும் கோல் கிலேடியேடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post