
ஐந்து தசாப்தங்களாக நாடு வன்முறையால் பீடிக்கப்பட்டிருப்பதாகவும், இவ்வாறான தீர்வுகள் மூலம் எமது பிள்ளைகளுக்கு மீண்டும் வன்முறையைக் கையளிக்காமல், மனிதநேயம் என்ற பெயரில் நாட்டின் உயர்மட்ட மதத் தலைவர்கள் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார்.
$ads={2}
இது நமது மதங்களின் மதிப்புகளுக்கு முரணானது. இது எங்கள் நாட்டின் பிரதிவிம்பத்திற்கு கடுமையான சேதம் விளைவிக்கும் விஷயம் என்று சொல்ல வேண்டும் என்று கூறிய அவர் குறிப்பாக, ஆனந்தா கல்லூரி உங்களுக்கு வழங்கிய மதிப்புகளுக்கு ஏற்ப, நாட்டின் பௌத்த போதனைகளுக்கு ட்பட்டு தசராஜ தரமங்களுக்கு ஏற்ப நாட்டை ஆளுமாறு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவை நான் கேட்டுக்கொள்கிறேன். இன்று நீங்கள் மேற்கொண்டுள்ள இந்த பயணம் நாட்டுக்கு சங்கடமாக இருக்கிறது. உங்களுடைய இந்த பயணம் நாட்டை இழிவுபடுத்துவதாக அமைந்து காணப்படுகிறது. இது நாட்டின் பிரதிவிம்பத்தை கடுமையாக சேதப்படுத்துகிறது.
ජනාධිපතිතුමනි බෞද්ධ වටිනාකම් තුළ පිහිටා වැඩ කරන්න, සිරුරු භූමදානය ගැන වසංගත රෝග විද්යාඥයන්ගේ මතය පිළිගන්න. මෙරට දශක...
Posted by Imthiaz Bakeer Markar on Wednesday, December 23, 2020