இன்றும் 884 நபர்கள் நாடு திரும்பினர்!

இன்றும் 884 நபர்கள் நாடு திரும்பினர்!

வெளிநாடுகளிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் 884 பயணிகள் நாடுதிரும்பியுள்ளனர்.

இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையம் ஊடாக குறித்த அனைவரும் நாடுதிரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த இலங்கையர்கள் இவ்வாறு நாடுதிரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த நிலையில் நிர்க்கதிக்குள்ளான இலங்கையர்கள் 570 பேர் விசேட விமானங்களில் நாடுதிரும்பியுள்ளனர்.


$ads={2}

இதேவேளை நாடுதிரும்பியுள்ள அனைவரும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சுற்றுலா ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே பல்வேறு தேவைகளின் நிமித்தம் இலங்கையர்கள் 495 பேர் இன்று கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பல்வேறு நாடுகளுக்கு பயணித்துள்ளனர்.

இதன்படி குறித்த அனைவரும் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன், சிட்னி மற்றும் ஜப்பான் நரீட்டா சீனாவின் ஷங்காய் உட்பட கட்டார், டுபாய் அபுதாபி ஆகிய நாடுகளுக்கு பயணித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post