இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணம் மேலும் உயர்ந்தது!! தொற்றுக்கு 760 பேர் அடையாளம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணம் மேலும் உயர்ந்தது!! தொற்றுக்கு 760 பேர் அடையாளம்!


இன்றைய தினம் இலங்கையில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக பதிவாகியது.


அதன்படி, இலங்கையில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 149 ஆக உயர்ந்தது.


கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 55 வயது ஆண்  ஒருவரும், இம்புல்கொட பகுதியை சேர்ந்த 66 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு இன்று பதிவாகினர். இவர்கள் இருவரும் டிசம்பர் 11 மற்றும் 10 ஆம் திகதிகளில் முறையே உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 760 ஆக பதிவாகிய நிலையில், மொத்த எண்ணிக்கை 32,135 ஆக பதிவாகியது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post