முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தவறிழைத்துவிட்டார்! சொர்க்கம் சென்று 72 கன்னிப் பெண்களை அடைய எதையும் செய்வார்கள்! -சரத் வீரசேகர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தவறிழைத்துவிட்டார்! சொர்க்கம் சென்று 72 கன்னிப் பெண்களை அடைய எதையும் செய்வார்கள்! -சரத் வீரசேகர

மதத் தீவிரவாதமே மிகவும் ஆபத்தானது. மதத் தீவிரவாதிகள் சொர்க்கத்திற்கு சென்று 72 கன்னிப்பெண்களை அடைவதற்காக எதனையும் செய்வார்கள் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


தேசிய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


அவருடைய பேட்டியின் சில பகுதிகள் வருமாறு:


கேள்வி:


மத தீவிரவாதம் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என்பது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மூலம் புலனாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் என்ன?


பதில்:

புலனாய்வு சேவையில் ஏற்பட்ட பின்னடைவே முக்கிய காரணம்; உதாரணத்திற்கு நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் 2009 இல் வெற்றிபெற்றோம்.


அவ்வேளை மூன்று புலனாய்வு படைப்பிரிவுகளே காணப்பட்டன அதன் பின்னர் அதனை நாங்கள் ஏழாக மாற்றினோம்.


இதன்மூலம் புலனாய்வு பிரிவின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும், அந்த புலனாய்வு கட்டமைப்பு நல்லாட்ச்சி அரசாங்கத்தினால் அழிக்கப்பட்டது.


முன்னர் நாங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், தேவாலயங்கள் சாதாரண ஹோட்டல்கள் ஏன் வீதியோரங்களில் கூட புலனாய்வு பிரிவினரை பணியில் அமர்த்தினோம்.


ஏதாவது நடந்தால் எங்களிற்கு உடனடியாக தகவல் கிடைத்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இந்த வலையமைப்பு அழிக்கப்பட்டது. தற்போது அதனை நாங்கள் வலுப்படுத்தியுள்ளோம். அது சிறப்பாக செயற்படுகின்றது.


மத தீவிரவாதமே மிகவும் ஆபத்தானது; மததீவிரவாதிகள் சொர்க்கத்திற்கு சென்று 72 கன்னிப் பெண்களை அடைவதற்காக எதனையும் செய்வார்கள்.


$ads={2}

கேள்வி:

காத்தான்குடி போன்ற பகுதிகள் மதவெறி மற்றும் சட்டமின்மையின் வளர்நிலங்களாக காணப்படுகின்றன. அந்த பகுதிகளில் தற்போது நிலைமை எவ்வாறு உள்ளது?


பதில்:

அந்த பகுதிகளில் நாங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். நாங்கள் அந்த பகுதியில் எஙகள் புலனாய்வாளர்களை பணியில் அமர்த்தியுள்ளதுடன் பாதுகாப்பு படையினருக்கும் அறிவித்துள்ளோம்.


நாங்கள் ரோந்தினை அதிகரித்துள்ளதுடன் எங்களுக்கு தகவல் வழங்குபவர்களை அங்கு நிறுத்தியுள்ளோம். அவர்கள் எங்களுக்கு அவசியமான தகவல்களை வழங்குவார்கள். காத்தான்குடி மாத்திரமல்ல ஏனைய சில பகுதிகளுக்கும் நாங்கள் முக்கியத்துவத்தை வழங்கியுள்ளோம்.


அவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்க வேண்டுமென்றால் தகவல் கிடைத்ததும் அதனை ஆராய்ந்து புலனாய்வு பிரிவினருக்கு வழங்கியிருக்க வேண்டும். இந்த வலையமைப்பு கடந்த அரசாங்கத்தில் குழப்பப்பட்டுவிட்டது.


நாங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளோம்; தகவல்களை பெறுகின்றோம்.


கேள்வி:

நீங்கள் ஜெனீவாவிற்கு சுயமாகவே சென்றீர்கள். மனித உரிமை குற்றச்சாட்டுகள் குறித்த பக்கச்சார்பற்ற நிலையை அங்கு சமர்ப்பித்தீர்கள். உங்கள் அனுபவம் குறித்து தெரிவிக்க முடியுமா?


பதில்:

நாங்கள் யுத்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளோம் என நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டதாலேயே நான் ஜெனீவா சென்றேன்.


போர்க்குற்றம் குறித்த ஆறு தலைசிறந்த நிபுணர்கள் இலங்கை போர்க்குற்றம் எதிலும் ஈடுபடவில்லை என மிகதெளிவான அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.


ஆனால அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா சென்று நாங்கள் யுத்த குற்றங்களில் ஈடுபட்டோம் என தெரிவித்துடன் எங்களுக்கு எதிரான மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கினார்.


அதன் காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை வாக்கெடுப்பின்றி அதனை நிறைவேற்றியது.


மனித உரிமை பேரவையின் அனைத்து நாடுகளும் எங்களிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இதன் பின்னரே நான் ஜெனீவா சென்று மற்றைய பக்கத்தினை எனக்கு வழங்கப்பட்ட குறுகிய நேரத்திற்குள் சமர்ப்பித்தேன்.


என்னால் முடிந்ததை நான் செய்துள்ளேன். இந்த விவகாரத்தை அரசாங்கம் மிகவும் அவதானமாக கையாளும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.


$ads={2}

கேள்வி:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளின் தலைவர்களின் பின்னால் சென்று ஜெனீவாவில் உள்நாட்டு விவகாரங்களை விவாதிப்பதற்கு பதில் ஏன் அவர்கள் அரசாங்கத்துடன் தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை விவாதிக்க கூடாது?


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டிற்காக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். இலங்கையில் சமஸ்டியை அறிமுகப்படுத்துவது குறித்து அவர்கள் வேறு நாட்டுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் என்றால் அது அவர்கள் மேற்கொண்ட சத்திய பிரமாணத்திற்கு முற்றிலும் விரோதமானது.


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தவறிழைத்துவிட்டார் என நான் கருதுகின்றேன். அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபமுள்ளவராகயிருந்துள்ளார்.


ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டவேளை நாஜி அரசியல் கட்சி முற்றாக முற்றாக அழிக்கப்பட்டது. போல்பொட் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரர் கெமரூஜ் கட்சி காணாமல் போய்விட்டது.


சதாம் ஹுசைன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது பாத்கட்சி அழிக்கப்பட்டது. ஹொஸ்னி முபாராக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து அவரது தேசிய ஜனநாயக கட்சி தடைசெய்யப்பட்டது.


அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த மகிந்த ராஜபக்ஷவின் தவறு அது; அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபம் கொண்டிருந்தார்; அவர் அவர்களை மன்னித்தார்; தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை சாதகமாக பயன்படுத்துகின்றது. 


கடந்த காலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னரே நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்தவர்கள் உட்பட எங்கள் படையினரை கொலை செய்த பண்டிதரின் வீட்டிற்கு சென்று சுமந்திரன் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கின்றார்; அவருக்கு புகழாரம் சூட்டுகின்றார்.

 

தனது பாதுகாப்பிற்கு அளிக்கபபட்ட விசேட அதிரடிப்படையினரை தனது வீட்டின் வெளியே வைத்துக்கொண்டே எங்கள் பாதுகாப்பு படையினரின் கொலையாளிக்கு அஞ்சலி செலுத்தும் தைரியம் சுமந்திரனுக்கு உள்ளது. அதன் பின்னர் அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குறித்து பேசுகின்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.