
இந்தியாவில் இருந்து மன்னார் பகுதிக்கு சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டு மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 532 கிலோ மஞ்சள் கட்டிகள் இன்று (28) தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சி முன்னிலையில் மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.பி. ஜெயதிலக தலைமையில், பொலிஸ் தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் இணைந்து மன்னார் நகர சபைக்குச் சொந்தமான மலக்கழிவகற்றல் நிலையத்தில் வைத்து தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட சுற்று நிருபத்தின் அடிப்படையில் கொரோனா தொற்று அபாயம் உடைய கடத்தல் பொருட்களை உடனடியாக தீக்கிரையாக்கும் படியான அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்படி மஞ்சள் கட்டிகள் முதற்கட்டமாக தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளன.
மன்னார், பேசாலை, தாழ்வுபாடு, தலைமன்னார் கடல் பகுதிகள் ஊடாக இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட மஞ்சள் கட்டிகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



