நேற்று கண்டியில் 40 தொற்றாளர்க்ள் - கம்பளை மற்றும் குண்டசாலை பிரதேசங்களில் அதிகளவில் தொற்றாளர்கள்!

நேற்று கண்டியில் 40 தொற்றாளர்க்ள் - கம்பளை மற்றும் குண்டசாலை பிரதேசங்களில் அதிகளவில் தொற்றாளர்கள்!

கண்டி மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 991 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று மொத்தமாக 40 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். குண்டசாலை பிரதேசத்திலேயே நேற்று அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்  


குண்டசாலை - 12

அக்குரணை  - 7

பம்பரதெனிய - 1

ஹரிஸ்பத்துவ - 2

கங்கவட்டகொரலே - 3

பூஜாப்பிட்டிய - 2

கண்டி மாநகர சபை - 3

உடுனுவர - 1

உடபலாத கம்பளை - 9

$ads={2}

அக்குரணை பிரதேசத்தில் 277 தொற்றாளர்கள் இனங்காணபட்டிருப்பதுடன் அதிகூடிய தொற்றாளர்களை கொண்ட பிரதேசமாக கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.


கண்டி மாநகர சபை பிரதேசத்தில் மொத்தமாக 208 கொரோனா தொற்றாளர்களும் பாததும்பர பிரதேச சபை பிரிவில் 66 கொரோனா தொற்றாளர்களும், கம்பளை உடபலாத பிரதேசத்தில் 78 தொற்றாளர்களும், குண்டசாலை பிரதேசத்தில் 65 தொற்றாளர்களும் இது வரை இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவரை 5 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன. அக்குரணையில் 3 மரணங்களும், கலஹா மற்றும் கண்டி மாநகர சபை பிரிவுகளில் தலா ஒரு மரணமும் இதுவரை பதிவாகியுள்ளது. 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post