தடுப்பூசி போடத்தொடங்கியதும் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்; லண்டனில் 3 அடுக்கு ஊரடங்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தடுப்பூசி போடத்தொடங்கியதும் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்; லண்டனில் 3 அடுக்கு ஊரடங்கு!

இங்கிலாந்தில் தடுப்பூசி போடத்தொடங்கியதும் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இதனால் அங்கு கொரோனா வேகமாக பரவுகிறது. அங்கு 3 அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

லண்டன்

இங்கிலாந்தில் லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வரும் புதன் கிழமை முதல் 3 அடுக்கு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை, சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் உறுதிபடுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும், தலைநகரான லண்டனில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. அதனால் அங்கு 3 அடுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


$ads={2}

ஏனெனில், இந்த குளிர்காலத்தில் மக்கள் கட்டுப்பாடுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால், பேரழிவு தரக்கூடிய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று லண்டன் மேயரின் செய்தி தொடர்பாளர் எச்சரித்து உள்ளார்.

இந்த நிலையில், தற்போது, லண்டன், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர், எசெக்ஸ் மற்றும் சில பகுதிகள் வரும் புதன்கிழமை முதல் மிக உயர்ந்த அளவிலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளில் மூழ்கும் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது இங்கிலாந்தில் உலகத்தரம் வாய்ந்த மரபணு திறமைகள் இருக்கின்றன. அதற்கு நன்றி, கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் வேகமாக பரவுகிறது.

தற்போதைக்கு, இது ஒரு மோசமான நோய் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை கொரோனா தடுப்பூசிகளால் புதிய மாறுபாட்டிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இருந்தாலும் கூட, புதிய மாறுபாடு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த உருமாற்றம் தற்போதுள்ள வகைகளை விட வேகமாக வளர்ந்து வருவதாக ஆரம்ப ஆய்வு தெரிவிக்கிறது.

புதிய உருமாற்றம் குறித்து இங்கிலாந்து ஏற்கனவே உலக சுகாதார நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது, மேலும் விஞ்ஞானிகள் புதிய உருமாற்றத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளனர் என மாட் ஹான்காக் கூறினார்

தலைநகர் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீது மூன்றடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கபடாவிட்டால் பொருளாதாரத்தில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.பரபரப்பான பண்டிகை காலங்களில் குறிப்பிட்டசேவைகளைத் தவிர்த்து விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

3 அடுக்கு ஊரடங்கை தொடர்ந்து மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியேவோ அல்லது தனியார் தோட்டங்களிலோ அல்லது வெளிப்புற இடங்களிலோ சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் 10 முதல் 19 வயதுடையவர்களிடையே குறிப்பிடத்தக்க கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், பள்ளிகளையும் கல்லூரிகளையும் கிறிஸ்மசுக்கு முன்னதாகவே மூடிவிட்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் திறக்குமாறு அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று லண்டன் மேயர் கூறி உள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.