
அதன்படி, அக்குறணை - துணுவிலை வீதியில் ஒருவரும், தலகஹகந்தயில் 4 பேருமே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும், இதுவரை வெளியிடப்பட்ட PCR முடிவுகளின் படி அக்குறணை பிரதேசத்தில் இருந்து மொத்தமாக 224 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இது தவிர நூற்றுக்கும் மேட்பட்ட PCR முடிவுகள் இன்று (19) அல்லது திங்கள் அன்று வெளியாகவுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றினால் இரு மரணங்களும் அக்குரணையில் பதிவாகியுள்ளது.
தற்போது முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களான தெலும்புகஹவத்த மற்றும் புளுகோகதென்ன, இவ்விரு பிரதேசங்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்ட பிரதேசங்கள், இதில் எந்தவித மாற்றமும் இல்லை.
இதற்கு மேலதிகமாக எந்த கிராம சேகவர் பிரிவுகளும் முடக்கப்படுவதற்கான தீர்மானங்கள் இன்னும் எடுக்கப்படவில்லை என அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தெளிவு படுத்தினார்.
விஷேடமாக மத்திய மாகாண ஆளுனரின் தீவிர கண்காணிப்புடன், அக்குறணை சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையின் நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் என மத்திய மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.