20 நாள் குழந்தையை எரிக்க விடமாட்டோம்! - பெற்றோர் திட்டவட்டம்!

20 நாள் குழந்தையை எரிக்க விடமாட்டோம்! - பெற்றோர் திட்டவட்டம்!


பிறந்து 20 நாட்களேயான குழந்தை இன்று (08) உயிரிழந்த நிலையில் குழந்தைக்கு கொரோனா என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு 15, முகத்துவாரம், பெர்குசன் வீதியைச் சேர்ந்த எம்.எஸ்.எம். பாஹிம் என்பவரது செல்வப் புதல்வனே பிறந்து 20 நாட்களில் வாபாத்தான சோகம் நிகழ்ந்துள்ளது.


மேலும் குழந்தையில் தந்தை மற்றும் தாய்க்கு பெறப்பட்ட PCR முடிவுகள் எதிர்மறையாகவே (Negative) வந்துள்ளன.


நேற்று (07) இரவு 10 மணியளவில் அதிக உடல் வெப்ப நிலை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அக்குழந்தையின் உயிர் பிரிந்துள்ளது.


$ads={2}


உடலை எரிக்க சுகாதார பிரிவினர் முயற்சித்து வருகின்றனர், இந்நிலையில், உடலை எரிக்க கையொப்பம் வைக்க மாட்டோம் என்று அந்தப் பிஞ்சுக் குழந்தையின் பெற்றோர் போராடி வருகின்றனர்.


இதுகுறித்து முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிடுகையில்,


குழந்தைக்கு ஆரம்பத்தில் PCR எடுக்கும் போது, கொரோனா தொற்று இருக்கவில்லை. மாலையில் பரிசோதிக்கும் போது நேர்மறையாக வந்துள்ளது. மேலும் குழந்தையின் பெற்றோருக்கு எதிர்மறையாகி வந்துள்ளது என்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post