120 ஆண்டு பழைமை வாய்ந்த கிறித்தவ தேவாலயத்தில் பாரிய தீ விபத்து!

120 ஆண்டு பழைமை வாய்ந்த கிறித்தவ தேவாலயத்தில் பாரிய தீ விபத்து!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள 120 ஆண்டு பழைமை வாய்ந்த 19 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த கிறித்தவ தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கிழக்கு கிராமத்தில் உள்ள இந்த தேவாயத்தில் நேற்று (05) அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

$ads={2}

இந்த விபத்து காரணமாக அங்கிருந்த கட்டிடம் முழுவதும் எரிந்து நாசமானது என்றும் இதனை அடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் நான்கு தீயணைப்பு வீரர்களுக்கு இலேசான காயம் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post