மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் போது ரெபிட் எண்டிஜன் பரிசோதனை செய்யப்படும் 11 இடங்கள் தொடர்பான விபரம்!

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் போது ரெபிட் எண்டிஜன் பரிசோதனை செய்யப்படும் 11 இடங்கள் தொடர்பான விபரம்!

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வீதிகளையும் உள்ளடக்கியவாறு இன்று (புதன்கிழமை) முதல் 11 இடங்களில் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


அதிவேக வீதிகளில் இருந்து வெளியேறும் பகுதிகளிலும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் இடங்கள்

இதேவேளை, மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மேல் மாகாணத்திலுமே அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

இந்த நிலையில், பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post