
நாட்டிலுள்ள 11 மாவட்டங்களிலுள்ள 90 பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, அம்பாறை, மாத்தறை, காலி, இரத்தினபுரி, மொனராகலை, திருகோணமலை மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளிலுள்ள சில இடங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.