10 ஆயிரம் பெறுமதியான உணவுப்பொதிக்கு பதிலாக 10 ஆயிரம் வழங்குங்கள்! சஜித் முன்வைத்த கோரிக்கை!

10 ஆயிரம் பெறுமதியான உணவுப்பொதிக்கு பதிலாக 10 ஆயிரம் வழங்குங்கள்! சஜித் முன்வைத்த கோரிக்கை!

sajith-premadasa-opposition-leader-yazhnews

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளுக்குப் பதிலாக 10 ஆயிரம் ரூபாவை பணமாக அரசாங்கம் வழங்க வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை முன்வைத்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் இன்று (07) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இந்த கோரிக்கையை முன்வைத்தார்.


அரசினால் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


$ads={2}


மேலும், குறித்த உணவுப்  பொதியில் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் இருப்பதாக கூறப்பட்டாலும் அதில், 7 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களே இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.


அத்துடன், இவ்வாறு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும் கேள்வி எழுந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post