வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு 06 புள்ளிகள் கொண்ட சுகாதார அமைச்சின் வழிகாட்டல்!

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு 06 புள்ளிகள் கொண்ட சுகாதார அமைச்சின் வழிகாட்டல்!


தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நிலைமையில் இலங்கைக்குள் வெளிநாட்டில் இருந்து அழைத்துவரப்படுபவர்கள் பின்பற்ற வேண்டிய தனிமைப்படுத்தல் செயல்முறை குறித்து சுகாதார அமைச்சகம் 6 புள்ளிகள் கொண்ட வழிகாட்டுதலை ஒன்றை வெளியிட்டுள்ளது.


இந்த காலகட்டத்தில் இலங்கைக்கு திரும்பும் மக்களுக்கான தனிமைப்படுத்தல் தொடர்பாக சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு ஏற்ப இவ் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


$ads={2}


வெளிநாட்டிற்கு வருபவர்களுக்கு இதுவரை கட்டாயமாக்கப்பட 14 நாள் தனிமைப்படுத்தல்  நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 14 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தும் செயல்முறையைப் பின்பற்றுவதில் இருந்து  விலக்கு அளிக்கப்படும் என சுகாதார அமைச்சகம் அறிவித்திருந்தது.


அதற்கமைய கீழ்காணும் ஆறு புள்ளிகள் கொண்ட வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது.


1. இலங்கைக்குள் பிரவேசித்தவுடன் விமான நிலையத்தில் பெறப்படும் PCR எதிர்மறையாக இருத்தல்.


2. தனிமைப்படுத்தும் அறையில் இருவருக்கு அதிகரிக்காமல் இருத்தல்.


3. தனிமையான, ஒதுக்கப்பட்ட குளியலறை மற்றும் கழிப்பறை இருத்தல்.


4. பிற தனிமைப்படுத்தலில் இருக்கும் நபர்களோடு சமூக இடைவெளியை பேணுதல்.


5. தனிமைப்படுத்தலின் 12-14 ஆவது நாட்களின் மேலுமொரு PCR பரிசோதனை மேற்கொண்டு எதிர்மறையாக இருத்தல்.


6. தனிமைப்படுத்தல் நிறைவடையும் 14 ஆவது நாளன்று மேற்பார்வை மேற்கொள்ளும் சுகாதார அதிகாரிகளின் திருப்திக்கு ஏற்ப வெளியேறல்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post