தனியார் மருத்துவமனையில் PCR இன் போது போலி தகவலை வழங்கிய நபருக்கு கொரொனா உறுதி!

தனியார் மருத்துவமனையில் PCR இன் போது போலி தகவலை வழங்கிய நபருக்கு கொரொனா உறுதி!


நாட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்போது ஒரு நபர் தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது, கொரொனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நோயாளியின் பரிசோதனை முடிவுகள் அவர் வைரஸ் தொற்றுக்கு உறுதி என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், நோயாளி அளித்த தவறான தகவல்களால் அதிகாரிகள் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

$ads={2}

கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட எவரும் முதலில் சுய தனிமைப்படுத்தலில் தங்கள் இல்லத்தில் இருக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் தங்கள் பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் இராணுவ தளபதி தெரிவித்தார்.

மேலும், அத்தகைய கொரொனா வைரஸ் அறிகுறிகளைக் கொண்ட நபர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வது நல்லதல்ல என்றும் அவர் கூறினார்.

$ads={2}

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post