மார்ச் மாதத்திலிருந்து ஒரு வெண்டிலேட்டரையாவது சுகாதார அமைச்சு கொள்வனவு செய்யவில்லை!

மார்ச் மாதத்திலிருந்து ஒரு வெண்டிலேட்டரையாவது சுகாதார அமைச்சு கொள்வனவு செய்யவில்லை!

பல கொரோனா கொத்தணிகள் உருவெடுத்துள்ள போதும், 2020 மார்ச் 11 அன்று இலங்கையில் முதல் உள்ளூர் கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டதிலிருந்து சுகாதார அமைச்சு எந்தவொரு வெண்டிலேட்டரும் (Ventilator) கொள்வனவு செய்ய உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று சண்டே மார்னிங் பத்திரிகை தெரிவித்துள்ளது.
$ads={2}
மேலும் நாட்டில் தற்போது இருக்கக்கூடிய வென்டிலேட்டர்களின் எண்ணிக்கை சிக்கலான நோயாளிகளை கையாள போதுமானதாக இல்லை என்று சுகாதார அமைச்சின் மூத்த மருத்துவ அதிகாரியொருவர் தி சண்டே மார்னிங் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

"நாட்டில் சுமார் 23 மில்லியன் மக்கள் தொகை இருக்கும் பட்சத்தில், 630 அவசர சிகிச்சை (ICU) படுக்கைகள் மட்டுமே உள்ளன. மேலும் கொரோனா நிர்வாகத்திற்கு 146 படுக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இது ஒரு பரிதாபகரமான நிலைமையாக காணப்படுகின்றது. இன்னும் 400 வெண்டிலேட்டர்களையாவது ஏன் சுகாதார அமைச்சு கொள்வனவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பாமல் இருக்கின்றனர்? எங்களிடம் அதிகபட்சமாக ஒரு வெண்டிலேட்டர் கூட இல்லை” என்று மூத்த அதிகாரி தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post