சொஹைல் தன்வீருக்கு கொரோனா - LPL போட்டிகளில் இருந்து வெளியேற்றம்!

சொஹைல் தன்வீருக்கு கொரோனா - LPL போட்டிகளில் இருந்து வெளியேற்றம்!

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) கண்டி டஸ்கர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தவிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொஹைல் தன்வீர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார். இலங்கை வந்ததும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளிலிருந்தே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியது தெரிய வந்துள்ளது.

சொஹைல் தன்வீர் நேற்று (19) இலங்கைக்கு வந்ததாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.


$ads={2}

இலங்கைக்கு வருவதற்கு முன்பு, தன்வீர் LPL போட்டியில் பங்கேற்பதாக சமூக ஊடகங்களில் பதிவொன்றை மேற்கொண்டிருந்தார்.

சொஹைல் தன்வீர் LPL போட்டித் தொடரில் கொரோனா தொற்றுக்கு இலக்கான இரண்டாவது வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் ஆவார்.

கனடாவைச் சேர்ந்த கொழும்பு கிங்ஸ் வீரர் ரவீந்தர்பால் சிங் நேற்று (19) இலங்கைக்கு வந்ததும் கொரோனா தொற்றுக்கு இலக்கானது கண்டறியப்பட்டது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post